சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்கள்: ஜனாதிபதி அதிரடி

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்கள்: ஜனாதிபதி அதிரடி

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

இது குறித்து அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.

இதன்படி அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளதோடு, இது தொடர்பாக ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களின் மீட்புப் பணிகளுக்காக முப்படையினரினதும் ஒத்துழைப்பை வழங்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]