சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பெரிய வெங்காய செய்கையாளர்களுக்கு இழப்பீடு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பெரிய வெங்காய செய்கையாளர்களுக்கு இழப்பீடு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் விவசாயத்தை நம்பியிருப்போர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பெரிய வெங்காய செய்கையாளர்களுக்கு, இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானமானது, விவசாய அமைச்சினால் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்பிற்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் நாட்டின் பல பகுதிகளிலும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பெரிய வெங்காய செய்கை உள்ளிட்ட பல பயிர்ச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]