‘சீமராஜா’ ப்ரோமோஷனுக்காக புது முயற்சியில் இறங்கிய படக்குழு

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சீமராஜா’

இந்த படத்தில் வில்லியாக சிம்ரனும், சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மேலும் சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள நிலையில், 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எதிர்வருகிற செப்டம்பர் 13-ஆம் திகதி ரிலீசாக இருக்கிறது.

இந்த படத்தின் குழுவினர் தங்கள் படத்தை விளம்பரம் செய்வதற்காக புது முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். அந்தவகையில், பட ப்ரோமோஷனுக்காக கரோக்கி பூத் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

அதாவது, திரையரங்குகளில் அமைக்கபட்டுள்ள பிரத்யேக பூத்துகளில் ‘சீமராஜா’ படத்தின் பாடல்கள், பாடல் வரிகளின் வீடியோ தொகுப்பு, மற்றும் டீஸர் இருக்கும். அந்த பூத்துக்கு வருகை தரும் ரசிகர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டி கொள்ளும் வகையில் அந்த பாடல்களையும், டீசருக்கு ஏற்றவாறு டப்மாஷ் செய்யலாம். இது அவர்களது யூடியூப் பக்கத்தில் வெளியிடப்படுமாம்.

இதில் சிறப்பாக செயல்படுவோருக்கு இசை அமைப்பாளர் டி.இமானுடன் கலந்துரையாட வாய்ப்பு கிட்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]