சீன பெண்ணின் சடலம் ‘நுவரெலியா’வில் மீட்பு

நுவரெலியா

சீனநாட்டு பிரஜையான பெண்ணின் சடலம் ‘நுவரெலியா’வில் உள்ள விருந்தகம் ஒன்றின் அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் .

இந்த சம்பவம் இன்று(15) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

குறித்த சீன நாட்டு பெண் தனது குடும்பத்தாரோடு சுற்றுலாவிற்காக நுவரெலியா பகுதிக்கு வந்துள்ளதாகவும் அவருடன் வந்த ழூன்றுபெண்கள் வேறு ஒரு அறையிலும் மற்றுமொரு பெண் தனியாக வேறு ஒரு அறையிலும் நித்திரை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தனிமையில் நித்திரை செய்த பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கபட்டுள்ளதாகவும் நுவரெலியா பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

47வயதுடைய டாய்குயின் என்ற பெண்ணே சடலமாக மீட்கபட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]