சீன பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழித்துறை ஆரம்பிப்பு

சீன பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழித்துறை ஆரம்பிப்பு

சீன பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ் மொழித்துறை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றிலேயே வெளிநாட்டு கற்கைகளில் தமிழ் மொழித்துறையும் உள்வாங்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த பல்கலைக்கழக நிர்வாகம் இதனை அறிவித்துள்ள நிலையில், நான்காண்டு பட்டப்படிப்பில் 10 சீன மாணவர்கள் இணைந்துகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதில் இணைந்துள்ள 10 சீன மாணவர்களும் மிகவும் ஆர்வத்துடன் தமிழைக் கற்றுவருவதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் ஈஸ்வரி என்ற பெயர் கொண்ட சீன பேராசிரியையால் இங்கு கற்கைநெறிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு தமிழ் இலக்கியம் கற்பிக்கப்படுவதுடன், சீன மாணவர்களுக்கு முதல்நாள் வகுப்பில் தமிழ் எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, திருக்குறளும் கற்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில், இதுதொடர்பில் தமிழ் ஆர்வலர்கள் பலரும் தங்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

சீன பல்கலைக்கழகத்தில் சீன பல்கலைக்கழகத்தில் சீன பல்கலைக்கழகத்தில் சீன பல்கலைக்கழகத்தில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]