சீன தூதுவரை சந்தித்தார் மஹிந்த ராஜபக்ஷ

மஹிந்த ராஜபக்ஷ

இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷுயுவான், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரபூர்வ இல்லத்தில் கடந்த 24ஆம் திகதி இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது இலங்கை – சீன உறவுகள் குறித்தும், இரண்டு நாடுகளுக்கும் இடையில் செய்து கொண்ட உடன்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சீனாவின் திட்டங்களுக்கு நிலங்களைப் பெற்றுக் கொள்ளும் போது, இலங்கை மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தாத வகையில், அதனை முன்னெடுக்குமாறு சீனத் தூதுவரிடம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் கொழும்பில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்த சீனத் தூதுவர், மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]