சீன ஜனாதிபதியுடனான உறவு முறிந்து விட்டதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

சீன ஜனாதிபதியுடனான உறவு முறிந்து விட்டதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

சீன ஜனாதிபதியுடனான உறவு முறிந்து விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது குறித்த தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் கூறுகையில், ‘எதிர்வரும் நவம்பர் 6-ஆம் திகதி நடைபெறவுள்ள எங்கள் தேர்தலில் தலையிடுவதற்கு சீனா முயற்சி செய்து வருகிறது. இது எனது நிர்வாகத்துக்கு எதிரான நடவடிக்கை ஆகும்.

தேர்தலில் தமது அரசின் செல்வாக்கை சீர்குலைப்பதற்கு சீனா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.

எனவே சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான உறவில் நல்லிணக்கம் இல்லை’ என அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப்போர் மூண்டுள்ளது.  சீனப்பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் தொடர்ந்து கூடுதல் வரி விதித்து வருகின்றன.

இந்நிலையில், தைவானுக்கு அமெரிக்கா போர் விமான பாகங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இது சீனாவுக்கு அமெரிக்கா மீது ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]