சீனாவிற்கான இலங்கை ஏற்றுமதிகள் பல மடங்கு அதிகரிப்பு

சீனாவிற்கான இலங்கை ஏற்றுமதிகள் பல மடங்கு அதிகரிப்பு

சீனாவிற்கான இலங்கை ஏற்றுமதிகள் இவ்வாண்டு பல மடங்கு அதிகரிப்பை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த அதிகரிப்பானது, இதுவரை காலமும் இல்லாத ஒன்று என இலங்கை வர்த்தக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் இருந்து பிரதானமாக ஆடைகள், தேயிலை, இறப்பர் உற்பத்திப் பொருட்கள், ஆபரணங்கள், பழ வகைகள், வாசனைத் திரவியங்கள் மற்றும் கைப்பணிப் பொருட்கள் ஆகியன ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

இதேவேளை சீனாவின் மொத்த விற்பனையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளமையினால் சீனாவுக்கான ஏற்றுமதிகள் மேலும் அதிகரிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]