சீனாவின் முக்கிய அரசியல் ஆலோசகர் நாளைக்கு இலங்கைக்கு வர உள்ளார்

சீனாவின் முக்கிய அரசியல் ஆலேசாகர் இலங்கைக்கு வர உள்ளார். இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அவர் இவ்வாறு பயணம் செய்ய உள்ளார். இலங்கையின் சபாநாயகர் கரு ஜயசூரியவின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு இலங்கைக்கு அவர் வர உள்ளார். அதேவேளை பாகிஸ்தானிய செனட்சபையின் தலைவர் மிலான் ராசாவின் அழைப்பினை ஏற்றுக் கொண்டு பாகிஸ்தானுக்கும் செல்ல உள்ளார்.

இவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.