சீனப் பெண்ணிடம் பணத்தைப் கொள்ளையடித்த பொலிஸ் சார்ஜண்ட் கைது

கஸினோ வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் சீனப் பெண்ணொருவரைத் தாக்கி அவரிடமிருந்த பெறுமதியான இரு கைத்தொலைபேசிகளையும் ஒன்றரைக் கோடி ரூபா பணத்தையும் கொள்ளையிட்ட பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் உட்பட மூவர் வெள்ளவத்தை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பொலிஸ் சார்ஜண்ட் கம்பஹா தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் விசேட விசாரணைப்பிரிவில் பணியாற்றுபவர் எனத் தெரியவந்துள்ளது.

வெள்ளவத்தையிலுள்ள தனது கஸினோ நிலையத்திலிருந்து கடந்த மாதம் 27ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் தனது வாகனத்தில் வீடு திரும்பிய இந்தப் பெண் வீட்டு முற்றத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கியபோது சந்தேகநபர்கள் மூவரும் அவரை சுற்றிவளைத்துக்கொண்டு தாக்கிய பின் இரு கைப்பேசிகளையும் பணத்தையும் பறித்துச்சென்றுள்ளனர்.

இது தொடர்பில் அந்தப் பெண் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸ் சார்ஜண்டும் நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவரும் ஆணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]