விடைபெறுகிறார் சீனத் தூதுவர்

சீனத் தூதுவர்

சீனத் தூதுவர் இலங்கைக்கான சீனத் தூதுவராகப் பணியாற்றிய யி ஷியான்லியாங், பதவிக்காலம் முடிந்து நாளை நாடு திரும்பவுள்ளார்.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு மாதம் கழித்து- 2015 பெப்ரவரி 14ஆம் திகதி, இலங்கைக்கான 20 ஆவது சீனத் தூதுவராக “யி ஷியான்லியாங்” , பொறுப்பேற்றிருந்தார்.

சுமார் மூன்று ஆண்டுகள் கொழும்பில் பணியாற்றிய அவரது பணிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து அவர் நாளை பீஜிங் திரும்பவுள்ளார்.

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் சீன முதலீடுகள் கேள்விக்குறியாக மாறியிருந்த சூழலில், சீனத் தூதுவராகப் பொறுப்பேற்றிருந்த யி ஷியான்லியாங், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா வசப்படுத்தியுள்ள நிலையில் நாடு திரும்புகிறார்.

இவர் இலங்கையில் பணியாற்றிய காலத்தில், நாட்டின் 9 மாகாணங்களுக்கும், 25 மாவட்டங்களுக்கும் பயணங்களை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது