முகப்பு News Local News சி.வி.விக்னேஸ்வரனுக்கு அமெரிக்கா வாக்குறுதி

சி.வி.விக்னேஸ்வரனுக்கு அமெரிக்கா வாக்குறுதி

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்த போது, இலங்கைக்கான பதில் அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக, ரொபேர்ட் ஹில்டன், தனதுடுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், “ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், 30/1 (2015) மற்றும் 34/1 (2017) தீர்மானங்களின் கீழ், இலங்கை தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடப்பாடுகள், அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளுடனான சிறிலங்காவின் உறவுகளை விரிவுபடுத்துவதற்கு வசதியாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com