‘சி.வி இராஜினாமா செய்யவேண்டும்’

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாகாண சபைக்குரிய அதிகார வரம்பு எல்லைகள் கூட தெரியாமல் அவர் முதலமைச்சராக பதவி வகிக்கின்றார் என்றும் தவராசா கூறியுள்ளார்.

மேலும், வட மாகாணத்தின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்தமையை இடைநிறுத்ததுமாறு, மேன்மறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆகவே, நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று முதலமைச்சர் கௌரவமாக பதவி விலக வேண்டும் என்றும் வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கேட்டுக் கொண்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]