சிவி – அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு

சிவி

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவியுடனான இந்தச் சந்திப்புத் தொடர்பாக அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.

“முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தைப்பொங்கல் வாழ்த்துகளைப் பரிமாறினேன். வட மாகாண விவகாரங்கள் தொடர்பாக நல்லதொரு கலந்துரையாடலை நடத்தினேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறிப்பாக, நிலையான தேசிய நல்லிணக்கம் மற்றும் அனைத்து குடிமக்களுக்குமான பிரகாசமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஜெனிவா வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டியதன் தேவை குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்க தூதுவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]