சிவாவிடம் மன்னிப்புகேட்ட கமல்ஹாசன் – என்ன காரணம் தெரியுமா?

கமல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தாக்கியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

நடிகர் கமல்ஹாசனின் நடிப்பை உலக சினிமாவே வியந்து பார்த்து ரசித்துளளது. தற்போது இவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு கமல் ரசிகர்கள் சில சர்ச்சைகளில் சிக்கினர்.

கமல் ரசிகர்கள் என்றாலே அமைதியானவர்கள். எல்லோருக்கும் உதவக்கூடிய இளகிய மனம் படைத்தவர்கள். மேலும் சமுதாயத்தின் மேல் அதிக அக்கறை கொண்டவர்கள். இப்படி இருப்பவர்கள் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசனை தன்னுடைய படத்தில் கிண்டல் செய்ததாக கூறி சிவகார்த்திகேயனை மதுரை ஏர்போர்ட்டில் அவரது ரசிகர்கள் தாக்கினர்.

இதுகுறித்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் அளித்த பேட்டியில், ‘‘அப்போது ரசிகர்களுக்காக நடந்த சம்பவத்துக்கு கமல் சார் தன்னிடம் மிகுந்த வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டார்’’ என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]