சிவாஜியை மதிக்கத்தான் வேண்டும் – கமல்

சிவாஜியை எத்தனை அரசு வந்தாலும் சிவாஜியை மதித்துதான் ஆகவேண்டும் என்று சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

மாநில, தேசிய-ஆசிய எல்லைகள் கடந்த உலக நடிகர் எங்கள் சிவாஜி. ஒருவேளை நான் சினிமாவுக்கு நடிக்க வரவில்லை, வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சினிமா ரசிகனாக இருந்திருப்பேன். அப்படி பார்த்தாலும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளே வர அனுமதி கிடைக்காவிட்டாலும், வெளியே நின்று பார்த்துக் கொண்டிருப்பேன். ஆக இந்த விழாவுக்கு எப்படியும் நான் வந்திருப்பேன். யார் தடுத்தாலும் வந்திருப்பேன்.

சிவாஜியை

அரசியல் எல்லை, தேசிய-ஆசிய எல்லையெல்லாம் கடந்த இந்த நடிகருக்கு அரசு சொல்லும் நன்றி அறிவிப்பு என்று தான் நான் கருதுகிறேன். நம் வாழ்க்கையை மேம்படுத்திய அவரது கலைக்கு நாம் எல்லோரும் சேர்ந்து சொல்லும் நன்றி அறிவிப்பு இது.

பிரபு பேசும்போது எத்தனை முதல்வர்கள் மரியாதை செய்வதற்கு முன் வந்தார்கள் என்பதை பெயர் பட்டியலிட்டு குறிப்பிட்டார். நான் அடுத்த கட்டத்துக்கு போகிறேன். எத்தனை அரசுகள் வந்தாலும் இந்த கலைஞனை மதித்தாக வேண்டும். மதிப்பார்கள் என்பது உறுதி.

அதற்கு யாரையும் நாம் வற்புறுத்தியோ, கிள்ளியோ கேட்க வேண்டிய அவசியம் இல்லை. தன்னால் நடக்கும். தமிழர்கள் நன்றி மறவாதவர்கள். எப்போதும் இந்த கலைஞனை நினைவில் வைத்துக் கொண்டிருப்பார்கள். இவர் அடியொற்றி தவழ்ந்த குழந்தைகளில் நானும் ஒருவன்.

சிவாஜியை

பிறகு அதே நடையில் நடக்க வேண்டும் என்று முயன்று தடுமாறிய பல்லாயிரக்கணக்கான கலைஞர்களில் நானும் ஒருவன். அவரது கோடான கோடி ரசிகர்களில் ஒருவனாக மட்டுமே இங்கு எனது தன்நிலை மறந்து, என்நிலை மறந்து நான் ஒரு கலை ரசிகன் என்கிற முறையில் வந்திருக்கிறேன்.

எத்தனையோ நடிகர்கள் பேசிப்பேசி பார்த்து தோற்றவர்கள். பேசித் தோற்றவர்கள் என்று சொல்லும் போதெல்லாம் என்னைச் சொல்வது போலவே எனக்கு தோன்றும். இன்றும் முயன்று கொண்டிருக்கிறோம். அதுபோல் நடிக்க வேண்டும் என்று, அதுதான் எங்கள் நடிப்பை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த நடிகர் திலகத்துக்கு நன்றி சொல்ல இங்கு வந்திருக்கிறேன். அதற்கு அனுமதி அளித்த கலை உலகிற்கும், அரசிற்கும், அரசியலுக்கும் நன்றி தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]