சிவராம் படுகொலையுடன் புளொட்டுக்கு தொடர்பில்லை – சித்தார்த்தன்

சிவராம் படுகொலையுடன் புளொட்டுக்கு தொடர்பில்லை – சித்தார்த்தன்

ஊடகவியலாளர் சிவராம் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் புளொட் அமைப்பிற்கு எந்தத் தொடர்புமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் இதனை கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் அதனை நீதிமன்றமே உறுதிப்படுத்திவிட்டதாகவும் சில அச்சு ஊடகங்களே தமது கட்சியை இலக்குவைத்து தவறான செய்தியை வெளியிட்டுவருவதாகவும் சித்தார்த்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுகுறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “ஊடகவியலாளர் சிவராம் படுகொலையுடன் எமது கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டிலிருந்து அவர் நீதிமன்றத்தார் அவர் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிவராம் கொலையுடன் தொடர்புடையவர் எவ்வாறு தேர்தலில் நிற்கிறார் எனத் தெரிவிக்க முடியும்? அத்துடன், புளொட் உறுப்பினர் யார் என்றும் சொல்லப்படவில்லை. தற்போது எமது கட்சி மீது அவதூறைப் பரப்பும் நோக்குடன் சில அச்சு ஊடகங்களால் உண்மைக்கு மாறாகச் செய்திகள் வெளியிடப்படுகிறன” என, அவர் மேலும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]