சிவனொளிபாத மலை என்ற தமிழ் பெயர் பலகை மாற்றப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை

சிவனொளிபாத மலை என்ற தமிழ் பெயர் பலகை மாற்றப்பட்டமை தொடர்பில் தற்போது புதிய நடவடிக்கை எடுக்க எடுக்குமாறு அமைச்சர் மனோ கணேசன் பணிப்புரை விடுத்துள்ளார்.

சிவனொளிபாத மலை என்ற தமிழ் பெயர் பலகை யாரால், எப்படி, எந்த அடிப்படையில் அகற்றப்பட்டது என்பது தொடர்பில் உடனடியாக ஆய்வு அறிக்கை அனுப்பும்படியும் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு, சிவனொளிபாத மலை என்ற தமிழ் பெயர் பலகையை மலையடிவாரத்தில் மீண்டும் பொருத்துமாறும் நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு அமைச்சர் மனோ கணேசன் பணிப்புரை விடுத்துள்ளார்.

சிவனொளிபாத மலை எனும் தமிழ் பெயர் நீக்கப்பட்டு ஸ்ரீபாத எனும் சிங்கள பெயரே தமிழிலும் எழுதப்பட்டு மலையடிவாரத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சமூக வலைத்தளங்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையான விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்ற நிலையில், குறித்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மனோ கணேசன் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

சிவனொளிபாத மலை என்ற

சிவனொளிபாத மலை என்ற

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]