‘சிவனொளிபாதமலை’யில் 12 இலட்சம் பிளாஸ்டிக் போத்தல்கள்

சிவனொளிபாதமலை

‘சிவனொளிபாதமலை’க்கு வருகை தந்த யாத்திரிகர்களால் வீசி எறியப்பட்ட சுமார் 12 இலட்சத்துக்கும் அதிகமான பிளாஸ்டிக் போத்தல்கள் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பிளாஸ்டிக் போத்தல்கள் அம்பகமுவ பிரதேச சபையின் கழிவு சேகரிப்பு பிரிவினாலும், நல்லதண்ணி வனவிலங்கு காரியாலய பிரிவினராலும் சேகரிக்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி மீள்சுழற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ. ஹேமந்த கூறியுள்ளார்.

நல்லதண்ணி நகரத்திலிருந்து சிவனொளிபாதமலை உச்சி வரையான பகுதிகளில் இந்த பிளாஸ்டிக் போத்தல்கள் வீசப்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]