சிவனொளிபாதமலைக்கு வருகைத்தந்த 19 வயதுடையை இளைஞன் மரணம்!!

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை வந்த இளைஞன் மரணமானதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தளை மாபோல பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடையை துசான் பாரத் என்ற இளைஞனே இவ்வாறு மரணமானார். தனது உறவினர்கள் சகிதம் வேனில் சிவனொளிபாதமலைக்கு வருகைத்தந்த குறித்த இளைஞன், 03.03.2018 மாலை 2.30 மணியளவில் நல்லத்தண்ணி சீத்தலாகுளத்தில் நீராடியபோது மயக்கமுற்ற நிலையில், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்த போதே சிகிச்சை பலனின்றி மரணமானார்.

சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்படுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக நவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், மரணம் தொடர்பில் மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் நல்லததண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]