சிவகார்த்திகேயனை ஒழித்துக் கட்ட கை கோர்க்கும் சிம்பு

சிவகார்த்திகேயனை

சிவகார்த்திகேயனை ஒழித்துக் கட்ட கை கோர்க்கும் சிம்பு, தனுஷ், சந்தானம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கிய ‘வேலைக்காரன்’ படத்தை டிசம்பர் 22 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்போகிறார்கள். இதே தேதியில் தனது ‘சக்க போடு போடு ராஜா’ படமும் ரிலீஸ் என்று அறிவிக்க திரையுலகினர் இதனை சாதாரணமாக நினைக்கவில்லை. காரணம் விஜய் டிவி காலத்தில் சந்தானத்திற்கும், சிவகார்த்திகேயனுக்கும் நடந்த பனிப்போர். அதேபோல் சிம்புவும் சிவகார்த்திகேயனை சிலமுறை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தனுஷ் பற்றிக் கேக்கவே வேண்டாம்.

சிவகார்த்திகேயனை முன்னணி ஹீரோவாக்கியதே தனுஷ்தான். ஆனால் சிவகார்த்திகேயன் தனுசிடமே தன் வேலையைக் காட்ட, தனுஷும் சிவகார்த்திகேயனின் செம காண்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான் ‘சக்க போடு போடு ராஜா’ படத்திற்கு இசையமைத்த சிம்பு இந்தப் படத்தின் ஆடியோ விழாவை டிசம்பர் 6 ஆம் தேதி பிரம்மாண்டமாகக் கொண்டாடலாம் என்றும், அதில் தனுஷும் கலந்து கொள்வார் என்றும் சந்தானத்திடம் கூறியதாக சந்தானமே தனது டிவிட்டரில் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.

எதிரிகளாகக் கருதப்படும் சிம்புவும், தனுஷும் சந்தானத்திற்காக ஒன்று சேர்வதாகக் கூறப்பட்டாலும் சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ மீதான ரசிகர்களின் கவனத்தை சந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’ மீது திசை திருப்பத்தான் என்று திரையுலகில் அடித்துச் சொல்கிறார்கள்.