‘சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் பொன்ராமின் கூட்டணி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் திரைப்பட விநியோகஸ்தர்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்ற கூட்டணி ஆகும் .

இன்று துவங்கி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து முப்பது நாட்கள் தென்காசி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நடைபெறவுள்ளது .இக்கதை களத்திற்கு தென்காசி சரியானது என் நாங்கள் எண்ணியதால் இந்த பகுதியை முடிவு செய்தோம் . சிவகார்திகேயனிற்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளார் . சூரியும் சிவா வுடன் சேர்ந்து காமெடியில் கலக்க உள்ளார் .

ஒரு கலகலப்பான பொழுதுபோக்கு படத்தை மக்கள் நிச்சயம் எதிர் பாக்கலாம் . சிம்ரன் மற்றும் நெப்போலியன் அவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர் . மக்களை கவர்ந்து மயக்கிய பொன்ராம் -இமான் கூட்டணி இப்படத்திலும் சேர்ந்து இசை விருந்து வைக்க உள்ளனர் . படத்தின் ஒளிப்பதிவை திரு.பாலசுப்ரமணியமும், படத்தொகுப்பை திரு.விவேக் ஹர்ஷனும், கலை இயக்கத்தை திரு.முத்துராஜ் அவர்களும் கையாள உள்ளனர் .

இப்படியான பலம் வாய்ந்த அணியை அமைத்ததிலேயே வெற்றியை நோக்கின பயணம் தொடங்கிவிட்டதாக கருதுகிறோம் . சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை ” என கூறினார் இப்படத்தின் தயாரிப்பாளர் R D ராஜா .

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]