சில பிரதேசங்களில் மின்சாரம் துண்டிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில பிரதேசங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஹலியகொடை, கிரிஹெல்ல, குருவிட்ட மற்றும் எலபாத்த ஆகிய பிரதேசங்களில் நேற்று இரவு முதல் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, அகலவத்த, மத்துகம, ஹொரணை ஆகிய பிரதேசங்களில் நேற்று காலை முதல் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நாடு முழுவதும் மின்சாரம் தடைப்படும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]