சில பகுதிகளில் கடும் வரட்சி – 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக 8 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று பகல் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு அமைய 8 லட்சத்து 49 ஆயிரத்து 752 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு அமைய 2 லட்சத்து 43 ஆயிரத்து 683 குடும்பங்கள் இந்த பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வரட்சியான கால நிலை யாழ்ப்பாணம், குருநாகல், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களையே அதிக அளவில் பாதித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]