சிறையில் இருந்து போதைப்பொருள் விற்பனை செய்யும் வெலெ சுதா

வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள வெலெ சுதா அங்கிருந்தபடி போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெலெ சுதாவின் வழிகாட்டுதலின் கீழ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த அவரது சகா நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இது குறித்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள நபர் தான் வெலசுதாவின் உத்தரவிற்கு அமையவே போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் மற்றொரு நபரிடமிருந்து போதைப்பொருளை பெற்றுவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெலெசுதா ஓவ்வொருநாளும் தன்னை தொடர்புகொண்டு எவ்வாறு செயற்படவேண்டும் என்ற உத்தரவை வழங்கிவந்தார் என கைதுசெய்யப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெலசுதா சிறையிலிருந்தபடி கையடக்கத்தொலைபேசிகளை பயன்படுத்தி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளமை குறித்து தங்களிற்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலெசுதாவின் உத்தரவின் கீழ் நாடு முழுவதும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் பலர் உள்ளமை குறித்து தங்களிற்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெலெசுதாவின் இந்த நடவடிக்கைக்கு சிறைச்சாலை அதிகாரிகள் ஆதரவளிக்கின்றனர் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் சிறையிலிருந்து போதைப்பொருள்; வர்த்தகத்தில் ஈடுபடுவது ஆபத்தான நிலைமை என தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரியொருவர், அவர்களிற்கு கையடக்கத்தொலைபேசி உட்பட பல வசதிகள் கிடைக்கின்றன இதற்கு தீர்வு காணாவிட்டால் மேலும் மோசமான நிலை உருவாகலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]