சிறையில் இருந்து தமிழ்நாடு திரும்புகிறாரா சசிகலா?

சென்ற வருடம் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றவர் சசிகலா.

இவருக்கு பரோல் எடுக்கும் முயற்சிகள் தற்போது நடைபெறும் நிலையில் விரைவில் அவர் தமிழகம் வரபோவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான நடராசன் உடல் நலக்குறைவால் கடந்த மார்ச் மாதம் சென்னையில் காலமானார்.

அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காகச் சிறையிலிருந்து சசிகலா பரோலில் வந்தார். பரோல் முடிந்து மார்ச் 31-ம் திகதி மீண்டும் சிறைக்குப் சென்றார்.

இதையடுத்து டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது சசிகலாவைச் சிறையில் சென்று சந்தித்தனர்.

சசிகலா மீண்டும் பரோலில் வரப் போகிறார் என்கிற தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன.

இந்தச் சூழலில் அடுத்த வாரம் சசிகலா மீண்டும் பரோலில் வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குடும்ப உறுப்பினர்களிடையே உள்ள பிரச்னைகள், சொத்துகள் தொடர்பான பிரச்னை, தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம், அ.ம.மு.க. – அ.தி.மு.க. இணைப்பு போன்ற விடயங்கள் பற்றி சசிகலாவிடம் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஆஜராவதற்காகக் கூட அவர் வரலாம் என்கிற தகவல் ஆணைய வட்டாரத்திலும் குறிப்பிடப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]