சிறைச்சாலை சென்று பிள்ளையான் காலில் விழுந்த வியாழேந்திரன்??

கடந்த மாதம் 26 திகதி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவி ஏற்றதும் இலங்கை அரசியல் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது.

புதிய பிரதமர் தனது பெரும்பான்மை பலத்தை பாராளும்னறத்தில் நிரூபிக்க வேண்டிய தேவை எழுந்தது. எனினும் அதை நிரூபிக்க தேவையான உறுப்பினர் எண்ணிக்கை மஹிந்த ராஜபக்ச பக்கம் இருக்கவில்லை.

இதன் காரணமாக ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களை விலைக்கு வாங்க கடும் பிரயத்தனங்கள் நடந்தது. பல கோடி பெறுமதியில் உறுப்பினர்கள் சிலர் மஹிந்த பக்கம் தாவி கொண்டனர் .

16 உறுப்பினர்களை வைத்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பும் மஹிந்தவின் ஏலத்தில் இருந்து தப்பவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பை தனது பக்கம் எடுக்க மஹிந்த பல தடவை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்து பேசினார் , அதேபோல ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனாவும் பல பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார்.

ஆனால் கூட்டமைப்பு தமது ஆதரவு நிலைப்பாடு ரணில் பக்கமே என்பதை தெளிவாக கூறியதும் மட்டக்களப்பின் பாராளுமன்ற உறுப்பினர் புளொட் அமைப்பை சேர்ந்த வியாழேந்திரனை விலைக்கு வாங்கி கொண்டது மஹிந்த தரப்பு. அதுமட்டுமன்றி இவருக்கு மட்டக்களப்பு அபிவிருத்தி பிரதி அமைச்சர் பதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

இதனால் கூட்டமைப்பு அதிர்ச்சி அடைந்தது. தலைமைக்கு கட்டுப்படாமல் வியாழேந்திரன் பணத்துக்கு விலை போன விடயம் தமிழ் மக்கள் மத்தியிலும் பல அதிர்வலைகளை உண்டு பண்ணியது.

இந்நிலையில் , மஹிந்த ராஜபாக்ச பக்கம் பெரும்பாண்மை இல்லை என்பது தெரிந்ததும் அவர் பக்கம் சென்ற பலர் என்னசெய்வது என்று தெரியாமல் முழித்து வருகின்றனர். சிலர் மீண்டும் ரணில் பக்கம் தாவி கொண்டனர்.

மேலும் பொது தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் கூட்டமைப்பில் இருந்து விலை போன வியாழேந்திரனுக்கு எந்த கட்சியில் போட்டியிடுவது என்பது தொடர்பில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

இதன் காரணமாக வியாழேந்திரன் , சிறையில் உள்ள பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பக்கம் பாயும் பொருட்டு அவரை தேடி சென்று காலில் விழுந்து மன்றாடியுள்ளார்.

வியாழேந்திரனின் மன்றாட்டத்தால் பிள்ளையான் சற்று இறங்கி வந்து முதலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் உறுப்புரிமை எடுக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.

எனினும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் வியாழேந்திரனுக்கு வேட்பாளர் சந்தர்ப்பம் கொடுப்பது பற்றி பிள்ளையான் இன்னமும் இறுதி முடிவுக்கு வரவில்லை.

இதன் காரணமாக விலை வியாழேந்திரனின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]