சிறைக்கைதிகளை பரிமாற்றிக்கொள்ள ஈரானுடன் இலங்கை ஒப்பந்தம்

ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் சிறைக்கைதிகளை பறிமாற்றம் செயதுகொள்வது குறித்த ஒன்றிணைந்த உடன்பாட்டுக்கு நாடாளுமன்ற அனுமதி கிடைத்துள்ளதாக அந்நாட்டின் தூதுவர் காரியாலய தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் அந்நாட்டின் நாடாளுமன்றில் நேற்று (16) இடம்பெற்ற வாக்கெடுப்பில் சிறைக்கைதிகளை பறிமாற்றம் செயவதற்கு ஆதரவாக 153 வாக்குகள் கிடைத்துள்ளன.

அதற்கு எதிராக 11 வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல்கள குறிப்பிடுகின்றன. அத்துடன், வாக்களிப்பதில் இருந்து 7 உறுப்பினர்கள் விலகியிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான அனுமதி அந்நாட்டின் நாடாளுமன்றால் வழங்கப்பட்டுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையில் சிறைக்கைதிகளை பறிமாறிக்கொள்ள கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரின் இலங்கை விஜயத்தில் இந்த சிறைக்கைதிகள் பறிமாற்றம் குறித்து கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]