சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – பாப்பரசர் ஃபரான்ஸிஸ்

சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பரிசுத்த பாப்பரசர் ஃபரான்ஸிஸ் வலியுறுத்தியுள்ளார்.

1.2 பில்லியன் ரோமன் கத்தோலிக்கர்களுக்கான கடிதம் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயத்தைக் கூறியள்ளார்.

கடந்த வாரம் பென்சில்வேனியாவில் உள்ள தீர்ப்பாயம் ஒன்றினால் வெளியாக்கப்பட்ட அறிக்கை ஒன்றில், கடந்த 7 தசாப்த காலமாக இடம்பெற்ற சிறுவர் துஸ்பிரயோகங்கள் குறித்த விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

அதன்படி அமெரிக்காவில் மாத்திரம் 300 கிறிஸ்தவ மதகுருமார்களால் 1000க்கும் அதிகமான சிறார்கள் துஸ்பிரயோகிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இவ்வாறு கிறிஸ்தவ சபைகளில் இடம்பெற்ற பாலியல் துஸ்பிரயோக சம்பங்கள் திட்டமிட்டு மூடிமறைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இவ்வாறான சம்பவங்களை பரிசுத்த பாப்பரசர் வன்மையாக கண்டித்திருப்பதாக வத்திக்கான் திருச்சபை அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]