சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கு இலவச சட்ட உதவி

கால தாமதமாகின்ற வழக்குகளுக்கு இலவசமாக சட்ட உதவி வழங்க நடவடிக்கை

கால தாமதமாகின்ற சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கு இலவசமாக சட்ட உதவி வழங்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

1929 என்ற இலங்கை சிறுவர் தொடர்பாடல் ​ சேவையை தொடர்பு கொள்வதன் மூலமாக எந்தவொரு நபருக்கும் சட்ட உதவி பெற்றுக்கொள்ள முடியும் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சிறார் துஷ்பிரயோக வழக்குகள் கால தாமதமாகுவது தற்போதைய சூழ்நிலையில், முகம்கொடுக்கும் பிரதான பிரச்சினையாக மாறியுள்ளது.

அதற்கான உடனடி பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது.