சிறுவர்களைக் கல்வி கற்குமாறு வற்புறுத்தியதாக 1298 முறைப்பாடுகளும், குழந்தைகள் புறக்கணிக்கப்பட்டதாக 358 முறைப்பாடுகளும் பதிவு

சிறுவர்களைக் கல்வி கற்குமாறு வற்புறுத்தியதாக 1298 முறைப்பாடுகளும், குழந்தைகள் புறக்கணிக்கப்பட்டதாக 358 முறைப்பாடுகளும் பதிவு

சிறுவர்களைக்

இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து டிசெம்பெர் வரையான காலப்பகுதிக்குள் சிறுவர்களைக் கல்வி கற்குமாறு வற்புறுத்தியதாக 1298 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, குழந்தை மற்றும் சிறுவர் கட்டளைச் சட்டத்தின் கீழ் குழந்தைகள் புறக்கணிப்பட்டமை தொடர்பாக 358 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களில் இந்த ஆண்டின் ஜனவரி தொடக்கம் டிசெம்பெர் வரையான காலப்பகுதியில் சிறுவர்கள் விடயமான முறைப்பாடுகள் பற்றி விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது@ சிறுவர்கள் உரிமை மீறல் சம்பந்தமாக மொத்தமாகக் கிடைக்கப் பெற்றுள்ள 8548 முறைப்பாடுகளில் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் குறித்து 2037 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

பதிவான முறைப்பாடுகளின் அடிப்படையில் சிறுவர்களை பாலியல் துர் நடத்தைகளுக்கு உட்படுத்தியதாக 481 முறைப்பாடுகளும், பதினெட்டு வயதிற்குக் குறைவான சிறுமிகளை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியமை தொடர்பில் 322, மிகக் கடுமையான பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தியமை தொடர்பில் 284 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

இதேவேளை, சிறுவர்கள் தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்பட்டமை குறித்து 246 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

சிறுவர் உரிமை மீறல் தொடர்பாகப் பதிவாகியுள்ள ஒட்டு மொத்த முறைப்பாடுகளிலும் மாவட்ட அடிப்படையில் கொழும்பு மாவட்டமே முன்னிலை வகிக்கின்றது. அங்கு 1232 முறைப்பாடுகளும், கம்பஹா 925, காலி 647, குருநாகல் 564, களுத்துறை 550, இரத்தினபுரி 490, யாழ்ப்பாணம் 177, மட்டக்களப்பு 170, முல்லைத்தீவு 125, வவுனியா 122, கிளிநொச்சி 117 என்ற அடிப்படையில் சிறுவர் உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]