சிறுவர்களின் எதிர்காலம், அனைவருக்கும் முக்கியம் – ஜனாதிபதி

presiden in qatarசிறுவர்களின் எதிர்கால நன்மையின் பொருட்டு செயற்பட வேண்டியது அனைவரினதும் பொறுப்பு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கட்டாரின் டோஹா நகரில் உள்ள ஸ்டெப்பர்ட் பாடசாலைக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி, பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சிறுவர்கள் உலகில் எங்கு இருந்தாலும் அவர்களின் எதிர்காலம் பொருட்டு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

மாணவ சமூகங்களிடையே பல்வேறு கனவுகள் உள்ளன.

அவற்றை நனவாக்க அனைவரும் பாடுபடவேண்டியது அவசியம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கட்டாருக்கான இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்று டோஹா இஸ்லாமிக் மத்திய நிலையத்திற்கும் விஜயம் மேற்கொண்டனர்.

இந்த இஸ்லாமிய மத்திய நிலையமானது பண்டைய உலோகங்கள், நகைகள், பீங்கான்கள், மரம், கண்ணாடி, துணி மற்றும் நாணயங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

president in qatar

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]