சிறுவர்களால் திருடப்பட்ட மேலும் 10 நவீன அலைபேசிகள் கைப்பற்றப்பட்டன!

மட்டக்களப்பு ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள சந்திவெளிப் பிரதேசத்தில் அலைபேசி விற்பனை நிலையம் கூரை புகுந்து திருடப்பட்டதில் மேலும் விலைமதிப்புள்ள 10 நவீன அலைபேசிகளை திங்கட்கிழமை 12.03.2018 தாம் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத்திருட்டுத் தொடர்பாக சந்திவெளிப் பிரதேசத்திலுள்ள சிறுவர் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டுவரும் 4 சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து
திருடப்பட்ட 4800 ரூபாய் பணம், மற்றும் சுமார் 35 க்கு மேற்பட்ட கைப்பேசிகள், 2 டப்கள், கமெரா, அலைபேசி பற்றரி சார்ஜர்கள், அலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் என்பவை மீட்கப்பட்டன.

தொடர்ந்து சிறுவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் திருடிய அலைபேசிகளில் சிலவற்றை தாங்கள் பராமரிப்பு இல்லத்திலும் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் கையளித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதன்படி பொலிஸார் மேற்கொண்ட தொடர் விசாரணைகளில் விலையுர்ந்த 10 நவீன அலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அலைபேசி விற்பனை நிலைய உரிமையாளரான நவரெட்ணம் விஜிந்தனின் வாக்கு மூலத்தின்படி தனது விற்பனை நிலையத்திலிருந்து சுமார் 50 இற்கு மேற்பட்ட விலையுயர்ந்த அலைபேசிகள் திருடப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களான 10 தொடக்கம் 14 வயதிற்கிடைப்பட்ட 4 சிறுவர்களிடமும் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஷ‪;ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் அவர்களின் நெறிப்படுத்தலில், குற்றத் தடுப்புப் பொலிஸ் பொறுப்பதிகாரி நிரோஷ‪ன் பெர்னான்டோவின் வழிகாட்டலில் ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்பு புலனாய்வு அதிகாரி சார்ஜன்ற் ஈசாலெப்பை பதூர்தீன் தலைமையிலான பொலிஸ் அணியினர் விசாரணைகளில் ஈடுபட்டு இந்த அலைபேசி விறபனை நிலையம் மற்றும் உணவக திருட்டு சம்பந்தமான சந்தேக நபர்களைக் கைது செய்து பொருட்களையும் பணத்தையும் மீட்டனர்.

சந்திவெளி பிரதேசத்திலுள்ள ஒரு அலைபேசி விற்பனை நிலையம் மற்றும் அதனருகில் இருந்த உணவு விடுதி ஒன்று ஆகியவை சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் இரவு வேளையில் கூரை அகற்றி காணொளிக் கமெரா உடைக்கப்பட்டு கடைகளிலிருந்த அலைபேசிகளும் பணமும் இன்ன பிற பொருட்களும் திருடப்பட்டிருந்தன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]