சிறுமி சீரழித்த இளைஞன் பொதுமக்களால் அடித்துக்கொலை

8 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய இளைஞரை, பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து அடித்துக் கொலை செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் காஜியாபாத்தில் உள்ள லொனி பகுதியைச் சேர்ந்த ஜிதேந்திரா (24) என்ற இளைஞர், அதே பகுதியில் உள்ள 8 வயது சிறுமியை, கடந்த வெள்ளிக்கிழமை கடத்திச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

அத்துடன், இது தொடர்பாக யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் அச்சிறுமியை மிரட்டியுள்ளார்.

சனிக்கிழமை காலை ஜிதேந்திராவிடம் இருந்து தப்பி வந்த சிறுமி, தனக்கு நடந்த கொடுமை தொடர்பாக தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களுடன் சென்று, இளைஞனை தாக்கியுள்ளனர்.

மரத்தில் கட்டி வைக்கப்பட்ட இளைஞன் கடுமையாக தாக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார, படுகாயமடைந்த இளைஞனை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இளைஞன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ஜிதேந்திரா கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]