சிறுமி கடத்தல் குற்றச்சாட்டில் தலவாக்கலை-லிந்துலை நகர சபையின் தலைவர் உள்ளிட்ட நால்வர் கைது

5 வயது சிறுமியை கடத்தி விற்பனைச் செய்தனர் என்றக் குற்றச்சாட்டில், தலவாக்கலை-லிந்துலை நகர சபையின் தலைவர் உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்த நால்வரும் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அக்கரபத்தனை போட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த 5 வயதான சிறுமியை 2017 ஆம் ஆண்டு கடத்தி, விற்பனைச் செய்தனர் என்பது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்தே இந்த நால்வரும் கைதுசெய்யப்பட்டனர்.

தலவாக்கலை-லிந்துலை நகர சபையின் தலைவர் அனகிபுர ​அசோக சேபால, நகர சபையின் உறுப்பினர் பஹல விதானகே இஷார​ அனுருத்த மஞ்சநாயக்க உள்ளிட்ட நால்வ​ரே நுவரெலியா பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]