சிறுமியை வன்புணர்ந்த மாமா கைது

ரன்தெனிகொடயாய பிரதேசத்தில் வசிக்கும் 9 வயதுடைய பாடசாலை மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்திய சிறுமியின் மாமா, வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமணமான 31 வயதுடைய ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சில வருடங்களாக மனைவியை பிரிந்து சந்தேக நபர், தனிமையில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி தந்தையை இழந்து பாட்டியின் பொறுப்பில் வசித்து வந்துள்ளார்.

ஒரு மாதத்துக்கு முன்னால் இவ்வாறு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதுடன், தற்போது வைத்திய பரிசோதனைக்காக வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]