சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற காமுகன் கைது!

14 வயது சிறுமியை முச்சக்கரவண்டி ஓட்டுநர் துஸ்பிரயோகம் செய்ய முயன்றுள்ள சம்பவம் சென்னையில் பதிவாகியுள்ளது.

சென்னை  புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த முச்சக்கரவண்டி ஓட்டுநர் விஜி தாமஸ் (26). இவர் நேற்று முன்தினம் மாலைவீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியின் கைகளை கட்டி துஸ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார்.

உதவி கேட்டு அலறிய சிறுமியின் சத்தம் கேட்டு பொதுமக்களும் வீட்டை நோக்கி விரைய ஆரம்பித்தனர். பதற்றத்தில் விஜியும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். வீட்டிற்குள் சென்றபோது சிறுமியின் கைகள் கட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், குற்றவாளி விஜியை கைது செய்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]