சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபருக்கு விளக்கமறியல்

ஐந்து வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபரை 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் சுபாஷினி சித்திரவேல் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், மூதூர், பஸார் பள்ளி பகுதியை சேர்ந்த 48 வயதுடைய நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அறிமுகமாக நபரின் ஐந்து வயதுமகளை அந்நபர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

இதன்போது, அங்கு திடிரென வந்த சிறுமியின் தந்தை இதனை கண்டுள்ளார். பின்னர், ஊர்மக்கள் இணைந்து சந்தேக நபரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.