சிறுமியை கொடுமை செய்த சித்தி உள்ளிட்டு இருவர் கைது

 தோட்டத்தில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் பத்து வயது சிறுமியை தாக்கி, துன்புறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமியின் சித்தி மற்றும் அவரது உறவினர் ஒருவருமே இவ்வாறு கைதாகியுள்ளதோடு, இவர்கள் எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சிறுமி அவருடைய தந்தையாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் வெளிநாட்டிலும், தந்தை கொழும்பிலும் தொழில் புரிந்து வருவதாக தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் சிறுமி கடந்த ஒன்பது வருட காலமாக தனது பாட்டி பராமரிப்பில் இருந்துள்ளார்.

கடந்த வருடம், அவரை அவரது சித்தியிடம் ஒப்படைத்து விட்டு பாட்டி கொழும்பிற்கு தொழிலுக்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை சிறுமியின் செலவுக்காக அவரது தாயார் மாதாந்தம் 15,000 ரூபா பணம் சித்திக்கு அனுப்பி வைக்கிறார்.

இந்தநிலையில், சிறுமியை அவரது சித்தி வேலைக்காரியைப் போன்று நடத்திய வந்துள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த விடயம் குறித்து தோட்ட மக்களால் பொகவந்தலாவை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து, சிறுமி மீட்கப்பட்டதோடு, சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]