சிறுமியின் வாயினில் பட்டாசு கொளுத்திய இளைஞன்- இந்தியாவில் நடந்த துயரசம்பவம்

தீபாவளி தினம் , மற்றும் பண்டிகை நாட்களில் பட்டாசு கொளுத்தி மகிழ்வது தவறல்ல .ஆனால் அளவோடு இருக்க வேண்டும் .ஆபத்துக்கள் ஏற்படாத வகையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் .சிறுமியின் வாயினில் இளைஞர் ஒருவர் பட்டாசு கொளுத்திய அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது .

உத்திரப்பிரதேச மாநிலம், மீரட் நகரில் தீபாவளி களைகட்டியிருந்தது. அனைவரும் பட்டாசுகள் கொளுத்தி குதூகலித்தனர் .பெரியவர்கள் பட்டாசு கொளுத்துவதை 3 வயது சிறுமி வேடிக்கை பார்த்துள்ளார் .

சிவனே என்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சிறுமியை ஹர்பால் என்ற இளைஞர் அழைத்து அந்த பிஞ்சு குழந்தையின் வாயில் பட்டாசு வெடித்துள்ளார்.

பட்டாசு வெடித்ததில் சிறுமியின் வாய் கிழிந்துள்ளது .இளைஞரின் செயலினால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தார்கள் .

சிறுமியின் வாய் கிழிந்தமையினால் அவருக்கு 50 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது .எனிலும் சிறுமி ஆபத்தான நிலையில் தான் உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது .

இந்த ஈனச் செயலினை புரிந்த ஈவிரக்கமற்ற இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .தலைமறைவாகியுள்ள இளைஞரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்கள் .

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]