முகப்பு News Local News சிறுமிகள் மற்றும் யுவதிகள் மத்தியில் கருக்கலைப்பு அதிகரிப்பு

சிறுமிகள் மற்றும் யுவதிகள் மத்தியில் கருக்கலைப்பு அதிகரிப்பு

இலங்கையில் 15 முதல் 19 வயதிற்கு இடைப்பட்ட சிறுமிகள் மற்றும் யுவதிகள் மத்தியில் கருக்கலைப்பு வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விசேட நிபுணர் சனத் லெனரோல் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக ஆயிரம் கருக்கலைப்புக்கள் நிகழ்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், 15 முதல் 19 வயதிற்கு இடைப்பட்ட பெண்கள் மத்தியில் கருக்கலைப்பு வீதம் அதிகரித்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பெண்கள் இளவயதில் கர்ப்பம் தரிப்பதும், பிள்ளை பெறுவதும் பிரச்சினைக்குரிய விடயமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

அத்துடன், இதற்காக அரசாங்கம் கூடுதலான தொகையை செலவழிக்க நேர்ந்துள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com