சிறுமிகளை தேடும் பணி இன்றும்!

சிறுமிகளை தேடும் பணி இன்றும்!

லக்கலை – தெல்கமுவ ஓயாவில் நீராடச் சென்ற நிலையில் காணாமல் போன, மூன்று சிறுமிகளைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்றையதினம், தெல்கமுவ ஓயாவில் நீராடச் சென்ற 10 பேர் காணமல் போன நிலையில், அவர்களில் ஐவரின் சடலத்தை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மீட்டனர் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்களின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மீதமுள்ள மூன்று சிறுமிகளைத் தேடும் நடவடிக்கைகள், இன்றையதினமும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]