சிறுமிகளை சீரழிக்க முயன்ற காமுகனுக்கு நாய் கொடுத்த தண்டனை

சிறுமிகளை சீரழிக்க முயன்ற காமுகனுக்கு நாய் ஒன்று தக்க தண்டனையைக் கொடுத்துள்ளது.

அமெரிக்காவின் அர்கானஸ் மாகாணத்தை சேர்ந்தவர் ரான்டால் ஜேம்ஸ் என்பவர் இவர் அதே பகுதியை சேர்ந்த 3 வயது மற்றும் 6 வயது சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார்.

அப்போது காமுகனிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக குறித்த சிறுமிகள் கத்திக் கூச்சலிட்டுள்ளனர். இதனை பார்த்த அவர்களது வளர்ப்பு நாய், அந்த முதியவரின் மேல் பாய்ந்து கடித்து குதறியது.

மேலும் அந்த முதியவரின் மர்ம உறுப்பையும் கடித்ததோடு அல்லாமல், அதனை விழுங்கி ஏப்பம் விட்டது.

இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த முதியவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இரு சிறுமிகளையும் துஷ்பிரயோகம் செய்யவிடாது வளர்ப்பு நாய் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]