சிறுமிகளை கடத்தி விபச்சாரம் செய்து வந்த மாடல் அழகி கைது

தாய்லாந்தில் சிறுமிகளை கடத்தி இணையத்தில் விபச்சாரம் செய்து வந்த பிரபல ஆபாச மாடல் அழகி கைது செய்யப்பட்டுள்ளார். 32 வயதான அலிசா ஜெய்டி என்பவரே இச்செயலில் ஈடுபட்டுள்ளார். அலிசா ஜெய்டி நடவடிக்கையில் சந்தேகமடைந்த பொலிஸார் இரகசியமாக அவரை கண்காணித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அலிசா போன் மூலம் இளம் பெண்களின் புகைப்படத்தை இரகசிய போலீசாருக்கு அனுப்பி அவர்கள் விபச்சாரிகள் என குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து அலிசா விபச்சாரம் நடத்தி வருவதை கண்டறிந்த பொலிஸார் பாங்காக் விமான நிலையத்தில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக 16 வயது சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபட வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அலிசா மீது கடத்தல் உட்பட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள டிபாலிஜார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]