சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களுக்கு அமைச்சரவை பதவி?

புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின்போது சிறுபான்மை கட்சிகள் சிலவற்றின் தலைவர்களுக்கு அமைச்சு பதவிகள் கிடைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய, ஈ.பி.டி.பி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோருக்கு அமைச்சரவை பதவிகள் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.

இது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் தரப்புகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபடுகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா யோசனைக்கு வாக்களிப்பதில் இருந்து இவர்கள் இருவரும் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.