சிறுத்தை கொலை; நான்கு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி – கிருஷ்ணபுரம் மற்றும் தர்மபுரம் பகுதிகளை சேர்ந்த த 22 முதல் 26 வயதான இளைஞர்களேநேற்று இரவு கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இன்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போது, சந்தேக நபர்களை 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, இருவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.