சிறுத்தை கொலை; சந்தேக நபர்களுக்கு பிணை

கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் 10 பேரும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போது, தலா ஐந்தாயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும், இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]