சிறுத்தையொன்றை துன்புறுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

கிளிநொச்சி, அம்பாள்புரம் பகுதியில் சிறுத்தையொன்றை துன்புறுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமைக்காரியாலயம் எமது ஆதவன் செய்தி பிரிவுக்கு உறுதிபடுத்தியது.

சந்தேகநபர் நேற்று (சனிக்கிழமை) இரவு மாங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டது.

கிளிநொச்சியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையொன்றை அங்குள்ள இளைஞர்கள் அடித்து கொன்றதோடு அதனை துன்புறுத்தி காயப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பான ஒளிபடங்களும் காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பரவலாக வெளிவந்ததோடு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் சிறுத்தை கொலையுடன் சம்மந்தப்பட்டடவர்களை கைது செய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் 5 கிராமங்களில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதனடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]