மாணிக்கமடு சிலை வைப்பு விவகாரம்: முஸ்லிம் தலைமைகள் அறிக்கை மன்னர்களாக இருப்பது கவலைதருகிறது

மாணிக்கமடு சிலை வைப்பு விவகாரம் தொடர்பில் இறக்காமம் முஸ்லிம்கள் மட்டுமல்லாது, நாட்டு முஸ்லிம் சமூகமே திகைத்து நிற்கையில் முஸ்லிம் தலைமைகள் அறிக்கை மன்னர்களாக இருப்பது கவலையளிக்கிறது என நாபீர் பௌண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் பொறியியலாளர் யூ.கே. நாபீர் தெரிவித்துள்ளார்.

இது விடயமாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அதிகாரத்திலுள்ள முஸ்லிம் தலைமைகளான றவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன் ஆகியோர் மாணிக்கமடு சிலைவைப்பு விவகாரத்தை தடுத்து நிறுத்தாமல் சிலை வைக்கப்பட்டால் தங்களது இயலாமையை கருத்தில்கொண்டு அரசிலிருந்து விலகுவதுடன் தங்களது பதவிகளையும் துறப்பார்களா? இந்த விடயத்தில் முஸ்லிம் தோல்வி காணக்கூடாது.

இவ்வாறே தொடர்ந்தால் முஸ்லிம்களால் ஒரு இருண்ட யுகம் உருவாகாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? முஸ்லிம் இளைஞர்கள் இது விடயத்தில் கடும் விரக்தியோடு இருக்கின்றார்கள். இந்த இடத்தில் முஸ்லிம் இளைஞர்கள் அவதானமாக நடந்துகொள்ளவேண்டும்.

இது விடயத்தில் அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் சகல பள்ளிவாசல் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள். இனங்களுக்கிடையே ஒற்றுமையாக இருந்த மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சிறுபான்மையினர் வாழும் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]