ஓர் சிறிய விடயத்தையே செய்யத் திறமையற்றவர்களாக இருந்து கொண்டு சமஸ்டி வேண்டும் என்றெல்லாம் கோசமிடுகின்றோம் – சின்னத்துரை தவராசா

ஓர் சிறிய விடயத்தையே செய்யத் திறமையற்றவர்களாக இருந்து கொண்டு சமஸ்டி வேண்டும் என்றெல்லாம் கோசமிடுகின்றோம் – சின்னத்துரை தவராசா

அதிகூடிய அதிகாரப்பகிர்வு வேண்டும், சமஸ்டி வேண்டும் என்றெல்லாம் கோசமிடுகின்றோம். ஓர் சிறிய விடயத்தையே செய்யத் திறமையற்றவர்களாக இருந்து கொண்டு கோசமிடுவதில் எந்தவித பயனுமில்லை என வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.

வட மாகாண சபையின் 2018ஆம் ஆண்டிற்கான பாதீட்டு ஒதுக்கீட்டிற்கான இரண்டாவது வாசிப்பு மீதான உரையின் போது இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.

முதலமைச்சர் அவர்களால் 2018ஆம் ஆண்டிற்குரிய பாதீட்டு ஒதுக்கீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான உரையைக் கேட்டுக் கொண்டிருந்த போது இன்னும் ஓரிரு வருடங்களிற்குள் எமது மாகாணம் சிங்கப்பூராக மாறிவிடுவதைப் போன்ற ஒரு பிரமையில் இருந்தேன்.

மத்திய அமைச்சுகளினால் எமது பிரதேசத்திற்குள் எமது அனுசரணையுடன் இல்லாது நடாத்தப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு அவர்கள் செயற்படுவதற்குரிய காரணம் எமது அரசியலமைப்பில் இன்றுள்ள குறைபாடு. அதற்காகத்தான் எமக்கு வழங்கப்படும் அதிகாரங்களுக்குள் மத்திய அரசு தலையிடாத வகையிலும் அல்லது எம்முடைய அதிகாரங்களை மீளப் பெற முடியாத வகையிலும் புதிய அரசியலமைப்பு மாற்றம் வருவதற்குரிய முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதே வேளை எமக்குத் தரப்பட்டிருக்கின்ற அதிகார வரம்பிற்குள் நாம் செய்ய வேண்டியதனைச் சரியாகச் செய்து கொண்டிருக்கின்றோமா என்பதைப் பார்ப்போம்.

எமது பாதீட்டிற்கான மொத்த நிதியினை நிதி ஆணைக்குழுவானது அவர்களிற்கு வழங்கப்பட்ட பிரமாணத்தின் அடிப்படையில் சிபார்சு செய்யலாமே தவிர ஒவ்வொரு அமைச்சிற்கும், திணைக்களத்திற்கும் அவர்களிற்குரித்தான வேலைத்திட்டங்களிற்கு நிதியினைக் குறித்து ஒதுக்குவது அரசியலமைப்பிற்கு முரணானது.

இவ் விடயத்தினை முதலமைச்சர் அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்து இம் முறைமையினை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கடந்த முறையும் கேட்டிருந்தேன்.

எமது பாதீட்டிற்கான நிதியைப் பெற்று எமது மக்களின் தேவைக்காக செலவினம் செய்வது என்பது, ஏதோ அதிகாரிகள் கடிதம் எழுதுகின்றார்கள், அரசாங்கம் தருகின்றது அதனை நாங்கள் செலவழித்து விட்டோம் என்று மார்தட்டுவது அல்ல. எமது மாகாணத்தின் விசேட தேவைகளை அடையாளப்படுத்தி அவற்றை முன்னுரிமை அடிப்படையில் நிரற் படுத்தி நிதி அமைச்சரிற்கு அல்லது பிரதம மந்திரிக்குக் கடிதங்கள் மூலமும் நேரடியாகவும் அத் தேவைகளிற்கான நியாயப்பாட்டினை எடுத்தியம்புவதன் மூலமே எமது பிரதேசத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நிதியினை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.

“வடக்கு மாகாண சபையினது பாதீடு தொடர்பாக மத்திய நிதி அமைச்சிற்கு ஃ அமைச்சரிற்கு எமது அமைச்சினால் எவ்விதமான கடிதங்களோ அல்லது அறிக்கைகளோ அனுப்பப்படவில்லை என்பதுடன், பொதுவாக மத்திய நிதி அமைச்சுடன் நேரடியான தொடர்பாடல்களெதுவும் எம்மால் மேற்கொள்ளப்படவில்லை.

செலவினத்திற்காக 68 மில்லியன் ரூபாவும்;, மூலதன செலவினமாக 138 மில்லியன் ரூபாவும் கோரப்பட்டிருப்பதாக அறியத் தந்திருக்கின்றார்கள். இது முதலமைச்சரின் அமைச்சின் கீழ் வருகின்ற அலகுகளிற்காக அவரது அமைச்சினால் கோரப்பட்ட நிதிக்கோரிக்கை. இங்கு எங்களிற்கு வழங்கப்பட்டிருக்கும் நிதிக் கூற்று அறிக்கையைப் பார்த்தீர்களேயானால் மூலதன செலவினம் 6 மில்லியனைத் தவிர மிகுதி அவ்வளவும் அரசினால் கொடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறு நாங்கள் கூற முடியும் நாம் கேட்ட நிதியினை அரசு தருவதில்லையென்று.

எமது மக்களிற்கு வேண்டிய தேவைகளிற்கான நிதியினை அவற்றிற்கான நியாயப்பாட்டுடன் அரசியல் ரீதியாக அமைச்சர்களுடன் பேசிக் குறிப்பாக நிதி அமைச்சர் மற்றும் பிரதம மந்திரியுடன் பேசி அதன் பின்பு அதிகாரிகள் ஊடாக எமது கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும். மக்களின் நலனில் உண்மையான அக்கறை இருக்குமேயானால் அதுவே செய்ய வேண்டிய படிமுறை. சிவாஜிலிங்கம் அவர்கள் ஒரு தனிமனிதனாக மத்திய நிதி அமைச்சரிடம் சென்று ஆழிக்குமரன் ஆனந்தனின் நினைவாகக் கட்டப்படும் நீச்சல் தடாகத்திற்கு 8 கோடி ரூபா பெற்றுக் கொள்ளமுடியுமானால், மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சராகவும், பதவிகளிற்காககப் போட்டிபோட்டு அமைச்சர்களாக இருக்கும் உங்களால் ஏன் அதனைச் சாதிக்க முடியவில்லை.

மாகாணத்திற்கான மூலதன நிதித் தேவையாக 10,310 மில்லியன் ரூபா கோரிக்கை விடுத்துள்ளார்கள். அவர்களினால் துறை ரீதியாகவும், முன்னுரிமை அடிப்படையிலும் அந்தக் கோரிக்கைகள் விடப்பட்டிருந்தும், அந்தக் கோரிக்கைகளின் தேவைக்கான அல்லது மேலதிக தேவைக்கான நியாயப்பாடுகள் எதுவும் அங்கு இல்லை. அதைச் செய்ய வேண்டியவர்கள் அரசியல் தலைமைப் பீடமே அன்றி அதிகாரிகளல்ல. நாங்கள் எங்கள் கடமைகளைச் சரியாகச் செய்யாமல் விட்டு விட்டு அரசு பணம் தருவதில்லையெனக் கூச்சலிடுவதில் எவ்வித பலனும் இல்லை.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (யுனுடீ) நிதிப்பங்களிப்புடன் செயற்படுத்தப்படும் ஐறோட் pசழதநஉவ என அழைக்கப்படும் தெருக்களைப் புனரமைப்பதற்கான வேலைத்திட்டத்தில் வடக்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிற்கான வேலைத்திட்டங்கள் முறையே 2018, 2019, 2020 ஆம் ஆண்டுகளில் அமுல்படுத்தப்படவிருந்தது.

வடக்கு மாகாணத்தில் இத் திட்டத்தின் கீழ் 585.37கி.மீ நீளமான 122 வீதிகள் புனரமைக்கப்படவிருந்தது. எமது அரசியற் தலைமைகள் பதவிப் பங்கீடுகளில் தங்கள் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தார்களேயன்றி அக்கூட்டங்களில் அரசியற் தலைமைகளெதுவும் பங்குபற்றாததன் விளைவு எமது மாகாணத்தில் இத்திட்டத்தின் கீழான செயற்பாடுகள் 2020ஆம் ஆண்டிற்குப் பிற்போடப்பட்டு ஏனைய இரு மாகாணங்களும் முன்னிலைக்கு வந்துள்ளன.

அரசாங்கத்தின் தேசிய வரவு செலவுத்திட்டத்தினை எடுத்துக் கொண்டால் துறைசார் அமைச்சுகளினால் 2018இல் செயற்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்களிற்கு மேலாக பாரிய திட்டங்களாக 50,000 கல்வீட்டுத் திட்டங்களும், ஏறத்தாழ அமெரிக்க டொலர் 600-700 மில்லியனிற்கான வீதி அபிவிருத்தித் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இத்திட்டங்களின் பெரும்பகுதி வட மாகாணத்திற்கு வரக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

ஏறத்தாழ 8,370 மில்லியன் ரூபாய்கள் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவ் வேலைத்திட்டங்களை ஆராய்ந்து பார்ப்பீர்களேயானால் அவற்றுள் பெரும்பாலனவை மாகாண சபையின் விடயப் பரப்பிற்குள் அடங்குகின்றது. இவ்வாறான முன்மொழிவுகள் வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் துறைசார் மேற்பார்வைக் குழுவிலும் பாராளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதன் விளைவேயாகும்.

அதிகூடிய அதிகாரப்பகிர்வு வேண்டும், சமஸ்டி வேண்டும் என்றெல்லாம் கோசமிடுகின்றோம். இந்த ஓர் சிறிய விடயத்தையே செய்யத் திறமையற்றவர்களாக இருந்து கொண்டு கோசமிடுவதில் எந்தவித பயனுமில்லை.

அரசிலிருந்து நிதி பெறும் விடயத்தில் மட்டுமல்ல எம்மை நோக்கிவருகின்ற வெளிநாட்டு முதலீடுகளையும் தடுப்பதிலே வல்லுநர்களாக இருக்கின்றோம்.

கடல் நீரை நன்னீராக்கி அதனை பருத்தித்துறை, வல்வெட்டித்துறைப் பகுதிகளிற்கு விநியோகம் செய்ய ஒரு தனியாரினால் எடுக்கப்பட்ட முயற்சி இன்று எமது முதலமைச்சரினால் முடக்கப்பட்ட நிலையில் இருக்கின்றது.
32 மில்லியன் அமெரிக்க டொலரில் இந்தத் திட்டம் ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க வேலைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த வேளையில், மருதங்கேணி பிரதேச செயலாளரினால் தடுக்கப்பட்டுள்ளன. “கொள்கை ரீதியாக தனியாரினால் நீரினை வழங்கும் செயற்பாட்டினை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை” என கௌரவ முதலமைச்சரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் 32 மில்லியன் அமரிக்க டொலர் செலவில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம், அதாவது உலகின் நிலப்பரப்பின் 2ஃ3 பகுதியைத் தன்வசம் கொண்டிருக்கும் அள்ள அள்ள வற்றாத கடல் நீரை நன்னீராக்கும் திட்டம். அது மட்டுமல்ல, அத் திட்டத்தினால் வெளியேறும் கழிவு நீர் முற்றாகக் கடலில் செல்லாமல் அதிலிருந்து உப்பை உற்பத்தி செய்வதற்கும் தயாராக இருக்கின்றார்கள். அவ்வாறு உற்பத்தியாகும் நீரில் 80 வீதத்தினையே அரசு, அதாவது நீர் வழங்கல் அதிகார சபை, வாங்குவதற்குத் தயாராக உள்ளதால் மிகுதி 20 வீதத்தினையும் போத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நாம் தடையாக இருந்தோமேயானால் ஒரு முதலீட்டாளரும் வடமாகாணத்திற்காக முதலீடு செய்வதற்கு வர மாட்டார்கள்.
முதலீட்ளர்களே அம்பாந்தோட்டையில் அவ்வாறான ஓர் திட்டத்தை மேற்கொள்வதற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்று அதற்கான வேலைத்திட்டங்களில் தற்போது ஈடுபட்டுள்ளனர். எமக்குக் கிடைக்கும் முதலீட்டு வாய்ப்புகளைத் தெற்கிற்கு அனுப்பினோம் என்ற சரித்திரம் படைத்த மகாகண சபையாக இந்த மாகாகண சபை அமையப் போகின்றது என்பதனை சுட்டிக்காட்டுகின்றேன்.

இவ்வாறே எமது பிரதேசத்தை நோக்கிவரும் ஒவ்வொரு முதலீட்டு வாய்ப்புகளையும் சுற்றுச் சூழல், அடிப்படை உரிமைகள் என்று நாங்கள் தட்டிக் கழித்துக் கொண்டு போனால் எமது பிரதேசம் எப்போது அபிவிருத்தி காணப் போகின்றது.

வடக்கில் மட்டும் வேலை இல்லாமல் இருக்கும் ஏறத்தாழ 75,000 இளம் சமுதாயத்தினரிற்கு நாம் என்ன ஏற்பாடு செய்துள்ளோம் அல்லது என்ன செய்யப் போகின்றோம். இலங்கையின் வேலையற்றோரின் வீதாசாரம் 4.4 ஆக இருக்கும் போது வட மாகாணத்தின் வேலையற்றோர் 6.3 வீதமாகவும், அதிலும் குறிப்பாக யாழ் மாவட்டத்தின் வேலையற்றோர் 7 வீதமாகவும் காணப்படுகின்றது. 2014இல் இத் திட்டத்தினை நீங்கள் தடுக்காமல் இருந்திருந்தால் இத் திட்டங்களில் பெரும்பான்மையானவை இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு யாழ் மாநகர சபை இன்று ஓர் சுத்தமான மாநகர சபையாக இருந்திருக்கும்.

ஆனால் அவர்களிற்குரிய ஊதியத்திற்கான பாதீட்டை இங்கு நாங்கள் அங்கீகரிக்கின்றோம். இது நான்கு வருட எமது செயற்பாடின்மையின் விளைவு. சட்ட வரைஞர் பிரிவொன்று மாகாகண சபையில் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் ஆளணி வழங்காமையின் விளைவே இது என்று இவ்வியலாமையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு முயற்சிக்கலாம். ஆனால், அரசாங்கம் இதற்குரிய ஆளணியினை வழங்காவிட்டாலும் சில வெளிநாட்டு அரசுகளும், சர்வதேச நிறுவனங்களும் இதற்காக தனியாரின் சேவையைப் பெறுவற்கு எமக்கு உதவ முன்வந்தன. ஆனால் நாம் அவை எவற்றையும் சரியாகப் பயன்படுத்தவில்லை.

நான் இதனை ஓர் கொள்கை அடிப்படையிலேயே கூறுகின்றேனே தவிர ஓர் குறிப்பிட்ட நபர் சார்ந்து கூறவில்லை என தெளிவாகக் குறிப்பிட விரும்புகின்றேன். உள்ளகக் கணக்காய்வுக்குழு சுயாதீனமாகவும், வலுவுள்ளதாகவும் இருந்திருந்தால் “நெல்சிப்” முறைகேடு நடைபெற வாய்ப்பு இருந்திருக்காது. ஆதலினால் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு மாகாண சபைக்கு நேரடியாகப் பொறுப்புக் கூறக் கூடிய வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]